இன்றைய ராசிபலன் – 18.02.2022

0

மேஷம்

மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.‌ கனவு நனவாகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும்.

வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள்.

சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் .பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.

எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.

சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள் .

கன்னி

கன்னி: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம் உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

துலாம்

துலாம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள்.

காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள் .

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். மதிப்புக்கூடும் நாள்‌

விருச்சிகம்

விருச்சிகம்: சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள்.

வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் . வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். சாதிக்கும் நாள்.

தனுசு

தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

மகரம்

மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களை எல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.

சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டிவரும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.

உத்தியோகத்தில் கூடுதல்கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.

கும்பம்

கும்பம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.

வாகனத்தை சீர் செய்வீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்‌.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தைரியமாக முடிவுகள் எடுப்பார்கள். நன்மை நடக்கும் நாள்

மீனம்

மீனம்: சமயோசிதமாக சாதுரியமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

அதிகாரப்பதவி பொறுப்புகிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். அமோகமான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here