இன்றைய ராசிபலன் – 13.02.2022

0

மேஷம்

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த பந்தங்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள்.

வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் முக்கியமான முடிவுகள் எடுப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்.

மிதுனம்

மிதுனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.

பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும்‌. பொறுமை தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குதகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார் . வாகன வசதிப் பெருகும்‌.

வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர் நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்.

வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரசினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.

பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும்‌ வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும்.

உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும் . நன்மை கிட்டும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள்.

நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.நல்லன நடக்கும் நாள்.

கும்பம்

கும்பம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்‌. உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள்.

தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும்.

பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

உழைப்பால் உயரும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here