இன்றைய ராசிபலன் – 12.05.2022

0

மேஷம்

மேஷம்: மற்றவர்களை நம்பி இருக்காமல் தன்னால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவீர்கள்.

உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

வியாபாரம் தழைக்கும்.‌ உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தொட்டது துலங்கும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.

உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். கனவு நனவாகும் நாள்.

மிதுனம்

மிதுனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.

தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.

வெளியூர் பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. தேவைகள் பூர்த்தி யாகும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.

சொத்து பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.முயற்சி வெற்றி பெறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள்.

உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கன்னி

கன்னி: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும்.

பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம்.

சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.

வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் பிரச்னைகள் வரக்கூடும்.

போராடி வெல்லும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினரின் ஆதரவும் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும்.

சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.‌மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.

தனுசு

தனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் அதிகாரிகள் நம்பிக்கை‌ பெறுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

கும்பம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சின்னச் சின்ன கவலைகள் மனக் கலக்கங்கள் வந்து போகும்.

அதிக உரிமை எடுத்துக்கொண்டு அதிகம் பேசவோ, பழகவோ வேண்டாம்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

மீனம்

மீனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைகளுக்கு பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

தாய்வழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புதிய நட்பால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சியான நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here