இன்றைய ராசிபலன் – 06.04.2022

0

மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தரும்.

வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள்.

குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

கவனம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

மிதுனம்: குடும்பத்தை பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது.

வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

உத்தியோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

கடகம்

கடகம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வேற்றுமதத்தவர் உதவுவார்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்கள் ‌ செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.

விருந்தினர்கள் வருகை உண்டு. வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.

உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.

வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது.

அலுவலகத்தில் மரியாதை கூடும். இடம்,பொருள்,ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள்.

பிள்ளைகளால் மதிப்பு கூடும். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

மனைவி வழியில் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அரசால் ஆதாயம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.

பழைய சொந்தங்கள் தேடி வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். திடீர் யோகம் கிட்டும்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கூடும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சகோதர வகையில் நன்மை உண்டு.

பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். நன்மை நடக்கும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here