இன்றைய ராசிபலன் – 05.05.2022

0

மேஷம்

மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

வியாபாரத்தில் அதிரடியான மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.

மற்றவர்களுக்கு உதவிசெய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மிகவும் கவனம் தேவைப்படும் நாள்.

கடகம்

கடகம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.

வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர் நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக்கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தில் அடிப்படை வசதியை மேம்படுத்துவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள்.

புதுமை படைக்கும் நாள்.

துலாம்

துலாம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். ஆடை, ஆபரணம் சேரும்.

வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்.

நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய காரியங்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.

வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.

உத்தியோகத்தில் மறைமுக அவமானங்கள் வந்து நீங்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

தனுசு

தனுசு: அனாவசிய செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும்.

குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு.

வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மகரம்

மகரம்: எதார்த்தமாக பேசிக் கவர்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் அவர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.

கும்பம்

கும்பம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.

அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம்

மீனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

புது முடிவுகள் எடுப்பீர்கள். புதியவர் நண்பர்களாவார்கள்.

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here