இன்றைய ராசிபலன் – 03.03.2022

0

மேஷம்

மேஷம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள்.

சகோதரர்களால் பயனடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் விஐபிகள் அறிமுகமாவார்கள்.

உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: உங்கள் செயலில் வேகம் கூடும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.

சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

மிதுனம்

மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.

அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

வாகனத்தை சீர்செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

கடகம்

கடகம்: சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும்.

மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.

கன்னி

கன்னி: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்

அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

துலாம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.

தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து போகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.

வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

தனுசு

தனுசு: சவால்களில் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.

உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும்.

உறவினர்களால் ஆதாயமடைவீர்கள்.‌ வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கும்பம்

கும்பம்: ராசிக்குள் சந்திரன் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

மீனம்

மீனம்: மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here