இன்றைய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்தில் மாற்றம் !

0

இன்றைய தினம் மின் துண்டிப்பை அமுல்படுத்தும் காலத்தை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு மட்டுப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் 3 மணிநேரமும் 20 நிமிடம் மின் துண்டிக்கப்படவுள்ளது. முன்னதாக 4 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.

இந்தநிலையில், A முதல் L வரையான மற்றும் P முதல் W வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் இரண்டு கட்டங்களாக மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு தேவையான உலை எண்ணெய்யினை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டதையடுத்து இன்றைய மின் துண்டிப்பு காலம் முன்னதாக திட்டமிட்ட நேரத்தை விட குறைக்கப்பட்டுள்ளது.

Demand Management Schedule on 18th April 2022
Period Group
09:00 – 11:00 J, K, L
11:00 –13:00 G, H, I
13:00 – 15:00 D, E, F
15:00 – 17:00 A, B, C
17:00 – 18:20 I, J, K, L
18:20-19:40 E, F, G, H
19:40-21:00 A, B, C, D
Period Group
09:00 – 11:00 V, W
11:00 –13:00 T, U
13:00 – 15:00 R, S
15:00 – 17:00 P, Q
17:00 – 18:20 U, V, W
18:20-19:40 R, S, T
19:40-21:00 P, Q

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here