இன்று (01) முதல் அமுலாகும் புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது

0

டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 15ம் திகதி வரை அமுல்படுத்தப்படும் சுகாதார வழிகாட்டியை சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (30) வெளியிடப்பட்டது.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, சுகாதார வழிகாட்டியை உரிய வகையில் பின்பற்றுமாறு சுகாதார பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி, திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டபங்களின் முழு அளவில் மூன்றில் ஒன்று என்ற அடிப்படையிலேயே, மக்கள் அழைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், 200ற்கும் அதிகமானோரை அழைக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், திறந்த வெளி திருமண நிகழ்வுகளுக்கு அதிகபட்சம் 250 பேரை அழைக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here