இன்று வெளியாகின்றது க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறு

0

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தரப் பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கோவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம்- 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம்-06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

இம்முறை உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here