இன்று விஷ்ணுவிஷால்-ஜூவாலா திருமணம்

0

தமிழ் திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கும் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுக்கும் இன்று அதாவது ஏப்ரல் 22ஆம் தேதி திருமணம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த திருமணம் சிறப்பாக நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக மிகக் குறைந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வான மெஹந்தி நிகழ்வின் புகைப்படங்கள் ம்ற்றும் வீடியோக்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் ஜுவாலா கட்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்திலும் திருமணத்திற்கு முந்தைய தினத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து மெகந்தி நிகழ்வில் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள், வீடியோகள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இன்று திருமணம் செய்யப்போகும் விஷ்ணுவிஷாலுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here