இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ள ஜனாதிபதி

0

விவசாயிகளிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள உரபிரச்சினை தொடர்பாக விவசாய துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

காய்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளார்.

நாட்;டின் பல பகுதிகளில் குறிப்பாக மலையகத்தில் காய்கறிகள் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது,இதன் காரணமாக 2018ம் ஆண்டிற்கு பின்னர் விலைகள் அதிகரித்துள்ளன.

உரநெருக்கடியே உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு காரணம் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இரசாயன உரங்களை அரசாங்கம் தடை செய்ததை தொடர்ந்தே இந்த நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையிலேயே இன்றைய சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here