இன்று நம் விருப்பங்களை நிறைவேற்றும் மார்கழி மாத பௌர்ணமி !

0

பௌர்ணமியில் தெய்வ தரிசனம் சிறந்த பலன்களை தரும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பௌர்ணமியில் மலை மீது பிரபஞ்ச சக்தி அதிகமாக இருக்கும்.

திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நிலைத்திடவும், குழந்தைப்பேறு கிடைத்திடவும், வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திடவும் இந்த பௌர்ணமி பூஜையை செய்வது நல்லது.
ஆன்மீகமோ? அறிவியலோ? இரண்டில் எதுவாக இருந்தாலும் பௌர்ணமியில் கிரிவலம் வருவது, விரதம் மேற்கொள்வது போன்ற செயல்கள் மனதை தூய்மைப் படுத்துவதாக கூறப்படுகிறது. பௌர்ணமி யில் முழு நிலவு தரும் பிரகாச ஒளி உங்கள் மனதிலும், வாழ்விலும் ஏற்பட பௌர்ணமி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இன்று மார்கழி மாதம் பவுர்ணமியில் விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். உடல் நலம் சீராகும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும்.

இன்று பௌர்ணமி இரவில் தியானம் செய்யும் பொழுது, இயற்கையாய் இருப்பதை விட அதிகமாகவே உங்கள் சக்திநிலை உயரும்.
மார்கழி பௌர்ணமி தினத்தில் வழிபடுபவர் களுக்கு உடல், மனம், ஆன்மாவினால் செய்த பாவங்கள் இறைவனின் அருளால் நீங்கும். மனோதிடம் பெருகும். மனதில் சிறந்த சிந்தனைகளும், எண்ணங்களும் எப்போதும் தோன்றும்.

பெருமாளின் அருட்கடாட்சம் கிடைத்து வீட்டில் வளங்கள் பெருகும். மனதில் இருக்கின்ற பயங்கள், கவலைகள் போன்றவை நீங்கும். உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மார்கழி மாதத்தில் வரும் பவுர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வந்தால் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மார்கழி மாதப் பௌர்ணமியில் தாமரைப்பூவால் அர்ச்சனை செய்து , களி நைவேத்தியம் செய்ய அம்பிகையின் பூரண அருளைப் பெறுவதோடு வாழ்வின் இன்னல்கள் நீங்கி வளம் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here