இன்று செவ்வாய் பிரதோஷம்… கடன் சுமைகள் முற்றாக நீங்கி நிறைவான வாழ்க்கை வாழ எம்பெருமானை வழிபடுங்கள்..!!

0

பிரதோஷத்தன்று நாம் செய்யக்கூடிய சிவ வழிபாடு நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய எல்லா தோஷங்களையும் நீக்கும். அப்படி இருக்கையில் நாளை செவ்வாய்க்கிழமையுடன் சேர்ந்து வர இருக்கும் பிரதோஷ தினத்தில் கடன் சுமை குறைய சிவபெருமானை எப்படி வழிபாடு செய்யலாம்? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

விரத முறை :
இன்றைய தினம் சிவபெருமானை நினைத்து காலை எழுந்து தலைக்கு குளித்து விட வேண்டும்.
தலைக்கு குளிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை போட்டு, ‘ஓம்” என்ற மந்திரத்தை அந்த தண்ணீரில் வலது கை ஆள்காட்டி விரலால் எழுதி, கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார நினைத்து கொண்டு அந்த தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும்.
பூஜை அறைக்கு வந்து ‘ஓம் நமசிவாய” மந்திரத்தை சொல்லி தீபம் ஏற்றி, நெற்றி நிறைய திருநீறு பூசிக்கொண்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

வழிபடும் முறை :
பிரதோஷ நாளில் உங்கள் மனதிற்குள் ‘நமசிவாய” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பது எல்லா தோஷங்களுக்கும், கடன் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கொடுக்கும்.

வேலைக்கு செல்பவர்கள் வேலை செய்யக்கூடிய நேரத்தைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் இந்த நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.

வாய்விட்டு சொல்லக்கூடிய மந்திரத்தைவிட, மனதிற்குள் உதடு அசையாமல் சொல்லக்கூடிய இந்த சிவ மந்திரத்திற்கு பலமடங்கு சக்தி உண்டு.

மாலை 4.30 மணிக்கு மேலாக பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, சிவனின் திருவுருவப்படம் இருந்தால் அதற்கு வில்வ இலை மாலை போட்டு தயார் செய்ய வேண்டும்.
27 வில்வ இலைகள் கட்டாயம் தேவை. 27 முறை வில்வ இலைகளைக் கொண்டு சிவனுக்கு ‘ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஒரு மாதுளை பழத்தை எடுத்து உள்ளே இருக்கும் விதைகளை உதிர்த்து, ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு நைவேத்தியம் வைக்கவும். கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு சிவபெருமானுக்கு தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளவும்.

பூஜைக்காக பயன்படுத்திய 27 வில்வ இலைகளை ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைக்கவும்.

விரத பலன்கள் :
இவ்விரதத்தின் மூலம் கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். வில்வ இலைகள் வாடினாலும் அதற்கு இருக்கக்கூடிய மகத்துவம் குறையாது.

கடன் சுமை குறையும் வரை அந்த வில்வ இலைகள் அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் இருக்கட்டும்.
முடிந்தவர்கள் நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று சிவபெருமானின் ஆலயத்தில் அமர்ந்து கடன் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, உங்களால் முடிந்தால் மாதுளை பழங்களை உதிர்த்து உள்ளே இருக்கும் மாதுளை முத்துக்களை, கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு மாதுளை பழத்தை, சிவபெருமானை நினைத்து தானம் கொடுப்பது சிறந்த பலனை கொடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here