இன்று சனி பிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

0

நம் பரம்பொருள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய ஒரு சிறந்த தினமாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதோஷ தினங்கள் இருக்கின்றன.அதிலே சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தை சனிமகாபிரதோஷம் என்று அழைப்பார்கள்.

ஆவணி மாதத்தில் தேய்பிறையில் ”சனி மகா பிரதோஷம்” அமைவது மிகவும் சிறப்பாகும.
அன்றைய தினம் சிவபெருமானை வழிபடும் முறைகள் குறித்தும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி மாத தேய்பிறை சனிப் பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்து சுத்தமாக நீராடி சுத்தமான ஆடை அணிந்து விபூதி அணிந்து சிவபெருமானை வணங்கி உணவேதும் உண்ணாமல் இருப்பது சிறப்பாகும்.முடியாதவர்கள் பால்,பழம் மட்டும் சாப்பிடலாம்.

மாலை வேளையில் மீண்டும் உடலை சுத்தப்படுத்தி பிரதோஷ நேரமாகக் காணப்படும் மாலை 4.00மணி முதல் 6.00மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று சிவன் சந்நிதியை பிரதட்சணம் வந்து சிவன்,நந்தி,மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களை வணங்க வேண்டும்.

பிறகு நந்தி தேவருக்கு அருகம்புல்,வெல்லம் கலந்த அரிசி என்பன கொடுக்கலாம்
சிவன் மற்றும் நந்தி தேவருக்கும் ஒரே சமயத்தில் அபிஷேகம் நடைபெறும் அபிஷேகத்திற்கு தேவையான பால்,தயிர்,தேன்,பன்னீர் போன்றவைகளை எடுத்துச் செல்வது நன்மையளிக்கும்.

அபிஷே அலங்கார பூஜை வழிபாடுகளில் முழு ஈடுபாடுடன் கலந்து கொள்ள வேண்டும்.
அதிலும் நாளைய தினம் ஆவணி தேய்பிறை பிரதோஷமானது சனி பகவானுக்குரிய சனிக்கிழமையும்,பூசம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் சிறப்பாகும் இப்படியரன தினம் அமைவது அபூர்வம்.

அன்றைய தினம் சிவன் கோயிலிலேயே இருக்கின்ற நவக்கிரக சந்நிதியில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு சிவன் நந்தி தேவர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோரையும் வழிபடுவதாலும் ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,ஜென்மச்சனி போன்ற சனிக் கிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதகமான பலன்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.

மேலும் மாத சிவராத்திரி தினமும் இந்த ஆவணி மாத தேய்பிறை சனி பிரதோஷ தினத்திலேயே வருவது மிகவும் சிறப்பானதாகும்.இந்நாளில் பிரதோஷ வழிபாடு தவறாமல் செய்வதால் நீங்கள் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
பிரதோஷ வழிபாடுகள் முடிந்ததும் உங்கள் சக்திக்கேற்ப ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்யலாம்.
இதனால் சிவபெருமான் மற்றும் சனி பகவானின் அருள்கடாட்சம் உங்களுக்கு கிடைக்கும்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி வழிபட்டு உணவருந்த வேண்டும்.
ஆவணி மாத தேய்பிறை சனி பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு
செய்த பாவங்களுக்கான கர்ம வினைகள் நீங்கும்,எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்,

புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும்,தொழில் வியாபாரங்களில் பிரச்சினைகள் ஏற்படாமல் நல்ல வருமானம் உண்டாகும்,குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்,

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பலன் கூடி வரும்,சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும்,
மாணவர்களின் கல்வி முன்னேற்றம் அடைவார்கள்.மேன்மையான நிலை ஏற்படும்.

ஓம் நமசிவாய சிவாய நமசிவாய போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
இன்றைய தினம் சிறப்பான தினமாக அமையட்டும்.
வாழ்க வளமுடனும் நலமுடனும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here