இன்று ஐப்பசி பெளர்ணமி: சிவனுக்கு அன்னாபிஷேகம்!

0

ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி விசேஷம் என்றாலும் ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி கூடுதல் விசேஷம் என்பது குறிப்பிடத்தக்கது. ஐப்பசி மாதத்தில் வரும் இந்த பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்

அதேபோல் இன்று அன்னாபிஷேகம் செய்து அன்னபூரணியின் பரிபூரண அருளை பெற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அதேபோல் இன்று பௌர்ணமி தினத்தில் அன்ன அலங்காரத்தில் வீற்றிருக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையாரின் அருளாசி தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் கிடைக்க அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். அளவில்லா நன்மை தரும் ஐப்பசி மாத பௌர்ணமியில் உலக உயிர்களுக்கு உணவளிக்கும் சிவபெருமானின் அருளையும் அன்னை அன்னபூரணியின் அருளையும் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுதல் செய்து கொள்கிறோம்

சிவன் கோயிலில் ஐப்பசி பெளர்ணமிஅன்று அன்னத்தால் அபிஷேகம் நடக்கும் போது அதை தரிசனம் செய்தால் சொர்க்கத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here