இன்று இரவு முதல் பயணக்கட்டுப்பாடு! யாழ். நகரில் அதிகமான மக்கள்

0

நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிக்கு மீண்டும் முழுமையான பயணத்தடை அமலுக்கு வருவதால் யாழ் நகரில் அதிகமான மக்கள் பொருள் கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க முடிந்துள்ளது.

இதன்படி இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலாகும் வகையில் இந்த பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிமுதல் 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணி வரை மீண்டும் பயணத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்போது அத்தியாவசிய சேவைகளை மாத்திரமே முன்னெடுக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மக்கள் வீதிகளில் அதிகமாக நடமாடியதுடன், பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.இ

இதேவேளை, முழுநேர பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அடையாள அட்டை இலக்கத்திற்கு அமைய வெளியில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் அனுமதி அட்டை மற்றும் நிறுவன அழைப்பு கடிதம், நிறுவன அட்டை என்பவற்றை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை விதிமுறைகளை மீறி செயற்படும் நபர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here