இந்தோனேஷியாவில் உச்சம் பெறும் குழந்தைகள் மரணம் ……

0

உலகின் நான்காவது மிக அதிக மக்கள் தொகை கொண்ட இந்தோனேஷியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்தோனேஷியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானதில் 12.5 சதவிகிதத்தினர் குழந்தைகள் என்பது அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களில் பலர் 5 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் குழந்தைகள் மரணத்திற்குக் காரணம் டெல்டா வகை வைரஸ் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேஷியா உருமாறி உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கர்ப்பிணிகளின் வயிற்றில் உள்ள சிசுக்களும் பாதித்து வரும் நிலையில், பிறந்த குழந்தைகளும் உயிரிழந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற அடிப்படை சுகாதார நிலைமைகளால் சிலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here