இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம் – இலங்கை தொடர்பில் வெளியான தகவல்

0

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் இதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் கரையோர மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

கரையோரத்திலும், அதனை அண்டிய பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here