இந்தோனேசியாவில் பாரிய தீவிபத்து…!

0

இந்தோனேசியா அரசிற்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 28 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பிறகு இந்த தீ பரவத் தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படாத சரிபார்க்கப்படாத காணொளிகள், பெரிய தீப்பிழம்புகள் மற்றும் அடர்த்தியான கருப்பு புகை வானத்தில் மேல்நோக்கி உயருவதை காட்டுகின்றன.

இந்த தீவிபத்தின் போது உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன் சேதங்கள் குறித்து உடனடியாக மதிப்பீடு செய்யவில்லை.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்புகளில் ஒன்று இதுவென அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here