இந்தோனேசியாவில் தொடர் மழை..! நிலச்சரிவில் சிக்கிய மக்கள்..!

0

இந்தோனேசியாவின் பெய்து வரும் கனமழை காரணமாக காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகினர்.

மேலும் நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர்.

இந்த நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்தன.

மீட்புப் படையினர் 41 சடலங்களையும், காயமடைந்த 5 பேரையும் மீட்டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளார்.

மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக 40 வீடுகள் மொத்தமாக சேதமடைந்துள்ளது.

இந்நிலையில், அப்பகுதியில் இருந்து மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேறிவிட்டனர்.

அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழை அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here