இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 8 பேர் பலி

0

இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் மலாங் நகரை மையமாக கொண்டு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவான‌து.

கடலுக்கு அடியில் 82 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஜாவாவின் லுமாஜாங், மலாங் மாவட்டங்களில் 8 பேர் பலியாகினர்.

23 பேர் காயமடைந்தனா். இரு மாவட்டங்களிலும் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன

கடலுக்குக் கீழே நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், அதனால் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை.

பாறை மற்றும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here