இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் கடல்வழி போராட்டம் (PHOTOS)

0

இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் கடல்வழி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு − கள்ளப்பாடு கடற்கரையில் இந்த போராட்டம் இன்று (17) காலை 7 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
50ற்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை வரை நடத்தப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துக்கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here