இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் உறுதி

0

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார்.

34 வயதான அஸ்வின் 2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவர் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் கைப்பற்றினார்.

குறைவான டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் சமீபத்தில் நிகழ்த்தி இருந்தார்.

அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மிக அபாரமாக பந்து வீசினார். 4 டெஸ்டில் அவர் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடினார்.

அதன்பிறகு அவர் இந்த போட்டிகளில் ஆடவில்லை.

டெஸ்ட் பந்து வீச்சாளர் என்று முத்திரை குத்தப்பட்டு ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்திற்கான இந்திய அணியில் இருந்து அவர் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டார்.

வீராட் கோஹ்லி சமீபத்தில் அளித்த பேட்டியில், அஸ்வின் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் அணிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை.

சுழற்பந்து ஆள் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சிறப்பான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் வாய்ப்பு வழங்கினால் ஒரு நாள் போட்டி, 20 ஓவர் ஆட்டத்தில் சாதித்து காட்டுவேன் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here