
இந்தியா கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ உருவாகியுள்ளது.
மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருக்கும்போது கனேடியர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் புகை சூழ்ந்துள்ள இடங்களை தவிர்க்குமாறும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
முடிந்தால் பயணத் திட்டங்களில் மாற்றங்களை சந்திக்கவும், பயணக் காலத்தை குறைக்கவோ அல்லது ரத்து செய்யவோ தயாராக இருக்குமாறும் கனடா அரசு தனது மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.