இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தடை விதித்த சவுதி அரேபியா

0

இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தமது நாட்டு பிரஜைகளுக்கு சவுதி அரேபியா தடைவிதித்துள்ளது.

மீண்டும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இந்தியா, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், யேமன், சோமாலியா, எத்தியோப்பியா, கொங்கோ, ஜனநாயக குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மோனியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சவுதி அரேபியாவில் இதுவரை மங்கி பொக்ஸ் தொற்றுடனான நோயாளர்கள் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில், குறித்த தொற்று தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here