இந்தியா – இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட்: லார்ட்ஸிலும் மழை குறுக்கீடு?

0

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே இன்று தொடங்க இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக டிராவில் முடிவடைந்தது. எனவே, இன்று லார்ட்ஸில் நடைபெறும் போட்டி மூலம் இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

நாட்டிங்கம் மைதானத்தில் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றிப்பெறும் சூழல் இருந்தபோது அன்றைய நாளில் மழை பெய்ததால் ஆட்டம் நடைபெறாமல் போனது. இதனால் வெற்றி வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்நிலையில் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்றையப் போட்டி எப்படி இருக்கும், வானிலை எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் கவலையாக இருக்கிறது. ஆனால் லார்ட்ஸ் முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கீடு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

ஆனால் நாட்டிங்கம் போல் லார்ட்ஸில் ஆட்டம் தடைபெறும் அளவுக்கு மழை குறுக்கீடு இருக்காது என்றும் முதல் நாள் ஆட்டத்தில் லேசான மழை மட்டுமே இருக்கும் அதனால் பெருமளவு பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here