இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த 3-ஆம் திகதி நடைபெற்றது.
அதில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்று சமநிலையுடன் உள்ளது.
இந்நிலையில், இப்போட்டி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவிக்கையில்,
இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற, வான்டரரஸ் ஆடுகளம் இரு அணிகளுக்கும் சவாலானதாக உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி தங்களுடைய 4-வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்தது.
இந்திய அணி பேட்டிங்கில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
முதல் இன்னிங்ஸ் மிகவும் சவாலாக இருந்தது, 60 ஓட்டங்கள் கூட பார்ட்னர்ஷிப் அமையவில்லை.
நன்றாக விளையாடக்கூடிய வீரர்கள் நல்ல ஸ்டார்ட் கிடைத்ததும், அதை சதமாக மாற்ற முயல வேண்டும்.
இரண்டாவது போட்டியில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், விளையாடாமல் இருந்த கோலி தற்போது நல்ல நிலையில் இருக்கிறார்.
அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவார் என டிராவிட் கூறியுள்ளார்.