இந்தியாவை அச்சுறுத்தும் பிளக் பங்கஸ்… பீதியடையும் மக்கள்…!

0

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களக்கு பிளக் பங்கஸ் நோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

குறிப்பாக, குஜராத், கர்நாடகா, உத்தரகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில், பிளக் பங்கஸ் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் சிலருக்கு பிளக் பங்கஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் இதுவரை 11,717 பேர் பிளக் பங்கஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,859 பேர் பிளக் பங்கஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு பிளக் பங்கஸ் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here