இந்தியாவில் 2022 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகள் இடம்பெறுமா….?

0

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் இந்தியாவில் நடைபெறும் என BCCI அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக IPL போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்பட்டது.

தற்போது இந்த ஓமிகிரேன் பரவல் குறையத்தொடங்கி உள்ளது.

இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் தடைகளை நீக்கி, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான IPL போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து முடிவுசெய்வதற்கான ஆலோசணை கூட்டம் நடைபெற்றது.

இதில் BCCI அதிகாரிகள் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் அணியின் உரிமையாளர்கள் போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வீரர்களின் பயணங்களை குறைக்கும் விதமாக போட்டிகளை Maharashtraவில் மட்டும் நடத்தலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இறுதி முடிவை BCCI அறிவிக்கும் எனவும் அதற்கு அனைத்து அணிகளும் ஒத்துழைப்பு தரும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு Lucknow மற்றும் Ahmedabad என்ற புதிய அணிகள் இணைக்கப்பட்டு, அணிகளுக்கான வீரர்களின் ஏலம் இந்த மாதம் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி மற்றும் 13 ஆம் திகதி ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here