இந்தியாவில் தமிழகத்தின் திண்டுக்கல் அருகே அரசு பள்ளி மைதானத்தில் 10 வயது மாணவி எரித்துக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கலின் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பாச்சலூரை சேர்ந்தவர் சத்யராஜ்.
கூலித்தொழிலாளியான இவருக்கு பிரியதர்ஷினி (வயது 10), பிரித்திகா (9) என்ற மகள்களும், நவீன்குமார் (6) என்ற மகனும் உள்ளனர்.
பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் மூவரும் படித்து வருகின்றனர், அப்பள்ளியில் பிரித்திகா 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
காலையில் வழக்கம் போன்று 3 பேரும் பள்ளிக்கு சென்றனர், அப்போது 11 மணியளவில் பிரித்திகா வெளியே சென்றுள்ளார், அதன்பின்னர் வகுப்பறைக்கு திரும்பி வரவில்லை.
அவரை தேடிப்பார்த்த போது, விளையாட்டு மைதானத்தில் கருகியபடி சடலமாக கிடந்துள்ளார், இதைப்பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரித்திகாவின் உடலை கைப்பற்றி விசாரணை ஆரம்பித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.