இந்தியாவில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!

0

இந்தியாவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு சிக்கன் தந்தூரி, மட்டன் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி லோசிகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும் இதே உணவகத்தில் உணவருந்திய 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள், உரிமையாளர் அம்ஜத் பாட்ஷா மற்றும் சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகிய வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாணி சாப்பிட்டு 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உணவகத்தில் சாப்பிட்ட கெட்டுப்போன சில்லி சிக்கன், தரமற்ற தண்ணீரே 30 பேரின் உடல்நல பாதிப்புக்கு காரணம் என அறிக்கை செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here