இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் 2 மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தில், நேற்று காலை தீப்பரல் ஏற்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில், 12 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தத் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது ஒருவர் தப்பியுள்ள நிலையில், 11 பேர் பலியாகியுள்ளனர்.
குறித்த கட்டடத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கே இந்த தீப்பரவலுக்கு காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.