இந்தியாவில் பரவும் கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்

0
A patient wearing an oxygen mask is wheeled inside a COVID-19 hospital for treatment, amidst the spread of the coronavirus disease (COVID-19) in Ahmedabad, India, April 21, 2021. REUTERS/Amit Dave

உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலில் இருந்து மீண்டும் வருகின்றது.

இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. நாட்டின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போன்றவைகளால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.1.617 உருமாற்ற கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது.

தற்போது இந்தியாவில் இந்த வகை வைரஸ் மீண்டும் பரவி வருவதும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

பி.1.1.7 உள்ளிட்ட இதர கொரோனா வைரஸ் வகைகளும் இந்தியாவில் பரவி வருகின்றது.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி மதம், அரசியல் சார்ந்த கூட்டங்களால் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியிருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகளில் 0.1 சதவீத மாதிரிகள் மட்டுமே மரபணு உருமாற்ற பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் இறுதியில் பி.1.617.1 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவுவது கண்டு பிடிக்கப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 21 சதவீதம் பேர் இந்த வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இதே போல பி.1.167.2 என்ற வைரசும் பரவி வருகிறது. இந்த வைரசால் 7 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒட்டுமொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவில் மட்டும் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here