இந்தியாவில் நெகிழ்ச்சியான சம்பவம்…! 12 மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு விற்ற சிறுமி….

0

இந்திய மாநிலமான ஜார்க்கண்டின் ஜம்ஷெட்பூரை சேர்ந்தவர் 11 வயதான துளசி குமாரி.

இவரது தந்தை ஸ்ரீமல் குமார், சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஒன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு மாணவியான துள்சி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அவரால் ஒன்லைனில் படிக்க முடியவில்லை.

மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் போதிய வசதியும் இல்லை.

இதனால் தந்தையின் வழியே சிறுமி துளசி குமாரியும் சாலையோரத்தில் மாம்பழங்கள் விற்க தொடங்கினார்.

அதில் இருந்து கிட்டும் பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்க திட்டமிட்டிருந்தார்.

இந்நிலையில், துளசி தொடர்பில் தகவல் அறிந்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே, ஜம்ஷெட்பூருக்கு சென்று துளசியை தேடி கண்டுபிடித்தார்.

துளசியிடம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு 12 மாம்பழங்களை வாங்கினார்.

இதனையடுத்து அதற்கான தொகையை துளசியின் தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஒன்லைன் வழியாக செலுத்தினார்.

இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஒன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும் என துளசியிடம் ஹீட்டே கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here