இந்தியாவில் நடந்த கொடூரம்… கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்…!

0

இந்தியாவின் குடியரசு தினமான நேற்று டெல்லி, விவேக் விஹார் பகுதியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேற்படி பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டு, செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு அவர் ஊர்வலமாக தெருவில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் தங்கை காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டுள்ளனர்.

பாதிக்கபட்ட பெண் வழங்கிய தகவலுக்கமைய, கூட்டு பாலியல் வன்புணர்வு புரிந்துள்ளதாக சந்தேகநபர்கள் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சட்டவிரோத மது விற்பனையாளர்களால் குறித்த பெண் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here