இந்தியாவில் தீவிரமாக பரவும் தக்காளி காய்ச்சல்…

0

இந்தியாவில் கேரள மாநிலத்தில் புதிதாக தக்காளி காய்ச்சல் பரவிவருகின்றது.

இதுவரை 85 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தக்காளி காய்ச்சலானது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாக தாக்குகின்றது.

கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளின் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தக்காளி காய்ச்சலின் பரவலை தொடர்ந்து, ஆரியங்காவு, அஞ்சல், நெடுவத்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நோய் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஆனால் கவனமுடன் இருப்பது அவசியம் எனக்கூறி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்

தோலில் ஏரிச்சலுடன் கூடிய தக்காளி பழ அளவிற்கான சிவப்பு திட்டிகள் தோன்றுவதுடன், நாக்கில் அதிக வறட்சி தன்மைக்கான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

எரிச்சலுடன் தோன்றும் சிவப்பு திட்டி குமிழ்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதாகவும் சில நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

இத்துடன், காய்ச்சல், உடல்வலி,மூட்டு வீக்கம், சோர்வு மற்றும் கைகள், முழங்கால்கள், பிட்டம் ஆகியவற்றின் நிறமாற்றம் போன்றவை.

இந்த நோய்கான அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.

அதிகப்படியான தண்ணீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் அவசியம்.

ஏரிச்சல் ஏற்படும் இடங்களை சொறியாமல் இருக்க வேண்டும்.

நோய் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும்.

நோயாளியைச் சுற்றியுள்ள இடங்களை சுத்தமாக வைத்து இருப்பது.

தோலில் ஏரிச்சலுடன் கூடிய தக்காளி பழ அளவிற்கான சிவப்பு திட்டிகள் தோன்றுவதால் இதற்கு தக்காளி காய்ச்சல் என அழைக்கின்றனர்.

தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here