இந்தியாவில் தடம் புரண்ட ரயில்…!

0

இந்திய ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 53 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஜார்க்கண்டில் தன்பாத் ரயில்வே மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கோடர்மா மற்றும் மன்பூர் ரயில்வே பிரிவுக்கு இடைப்பட்ட பகுதியில் குர்பா என்ற ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

சரக்கு ரயிலில் நிலக்கரி ஏற்றப்பட்டிருந்தது.

இன்று 26 ஆம் திகதி காலை 6.24 மணியளவில் திடீரென சரக்கு ரயில் விபத்தில் சிக்கியதில் ரயிலின் 53 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகி தடம் புரண்டுள்ளன.

அவற்றில் பல பெட்டிகள் உடைந்துள்ளது.

அதின் உள்ளே இருந்த நிலக்கரி அனைத்தும் தரையில் கொட்டி பரவியிருந்தன.

சரக்கு ரயில் அடுத்து இருந்த தண்டவாளம் வரை புரண்டு கிடந்துள்ளது.

இதனால், அந்த வழியே செல்ல கூடிய மற்றும் அந்த வழியில் வரும் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என மத்திய கிழக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

wagons, coal-laden, Gurpa station, Koderma, Manpur railway section, Dhanbad, casualties, incident, East Central Railway, ஜார்க்கண்ட், சரக்கு ரயில், 53 பெட்டிகள், தடம் புரண்டது.

இதனை தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரி செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பகுதியில் ரயில் சேவை மீண்டும் இயங்குவதற்கு பல மணிநேரம் ஆகும் என தெரியவந்துள்ளது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here