இந்தியாவில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பஸ் ஒன்று நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்.
47 பேருடன் பயணித்த பஸ்ஸொன்றை புதன்கிழமை காலை ஜல்லேரு வாகு என்ற நீரோடையில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பஸ்ஸின் சாரதியும், 5 பெண்களும் அடங்குவர்.
இந்த விபத்து குறித்து கவலை தெரிவித்துள்ள ஆந்திர மாநில ஆளுநர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன், காயமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர்.