இந்தியாவில் கொடூரச் சம்பவம்…! வளர்ப்பு நாயை காரின் கட்டி இழுத்து சென்ற அவலம்…!

0

இந்திய மாநிலம் கேரளாவின் கோட்டயம் அருகே நேற்று சாலையில் ஒரு கார் வேகமாக சென்று கொண்டிருந்தது.

அந்த காரின் பின்னால் ஒரு நாய் கட்டி இழுத்து செல்லப்பட்டுள்ளது.

இதனை கவனித்த அப்பகுதியினர் துரிதமாக செயல்பட்டு வாகனங்களில் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர்.

இதனையடுத்து அப்பகுதி பொலிசாரிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெரா காட்சியை ஆய்வு செய்த பொலிசார் நாயை கட்டி இழுத்து சென்றதை உறுதி செய்தனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் காரை ஓட்டி சென்றது கோட்டயம் அருகே லாக்காட்டூர் பகுதியை சேர்ந்த ஜெகுதாமஸ் (22) என்பது தெரியவந்தது.

அவரை கைது செய்த பொலிசார், தன்னுடைய வீட்டினர் இரவில் நாயை காரின் பின்புறம் கட்டி இருந்ததாகவும், இது தெரியாமல் தாம் காரை எடுத்து சென்றதாக விசாரணையில் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தில் அந்த நாய் உயிரிழந்துள்ளது.

அந்த இளைஞருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here