இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் பரவும் அபாயம்….

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருக்கிறது.

அந்த நோய் எதனால் பரவுகிறது.

எவ்வாறு சிகிச்சை அளிப்பது என்பது தொடர்பாக ஆராய மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களுரில் 179 இந்த நோய் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நோய் காரணமாக 54 பேர் கண் பார்வையை இழந்துள்ளனர்.

மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீவிர கொரோனா தொற்று, ஒக்சிஜன் குறைப்பாடு, நீரிழிவு நோய், எதிர்ப்பு சக்தி குறைப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த நோய் எளிதில் தாக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here