இந்தியாவில் இளம்பெண்ணை வெட்டி கொன்ற சகோதரன்!

0

இந்தியாவில் தமிழ்நாட்டில் நெல்லை வசவப்புரம் பசும்பொன் நகரில் இளம் பெண் ஒருவர் தனது சகோதரனால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சந்தேகநபர், தப்பிச் சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தினத்தன்று, குறித்த யுவதி தனது கையடக்க தொலைபேசியை பார்த்து கொண்டிருந்தவேளை, அவரது சகோதரன் அதனை கண்டித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சகோதரன் சுமார் 25 இடங்களில் அவரை வெட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் இந்த கொலைக்கு, உயிரிழந்த யுவதி கையடக்க தொலைபேசியை தொடர்ச்சியாக பயன்படுத்தியதுதான் காரணமா இல்லையா என்பது தொடர்பில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here