இந்தியாவில் இருந்து, பிரித்தானியாவிற்கு பேருந்து சேவை திட்டம்

0

இந்தியாவில் இருந்து வரும் செப்டெம்பர் மாதம் முதல், லண்டனுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்தின் பயணக்கட்டணமாக 15 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து பிரித்தானியாவின் லண்டன் நகருக்கு கடந்த 2021ஆம் ஆண்டு, மே மாதம் பேருந்து சேவையை தொடங்க Adventures Overland டிராவல்ஸ் என்ற நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்த அறிவுப்பு வெளியான சிலநாள்களிலேயே சுமார் 40,000 பேர் வரை இந்த பயணத்திற்கு தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்த திட்டத்தை அந்த நிறுவனம் கைவிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், வரும் செப்டெம்பர் மாதம் முதல் இந்த பேருந்து சேவை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் இந்த சாலைவழி பயணத்தின் இடையே வரும் நீர்நிலைகளை கடப்பதற்கு பெரிய படகுகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 படுக்கைகள் மட்டுமே கொண்ட இந்த பேருந்தில் உணவு உண்ணும் வசதி போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்படும்.

ஏற்கனவே கடந்த 1957ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து லண்டனுக்கு டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

இந்த பேருந்து சேவை பல நாடுகளில் ஏற்பட்ட எல்லை பிரச்சனைகள் மற்றும் விபத்துகளின் காரணமாக 1976 ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here