இந்தியாவில் இருந்து கனடாவிற்கு மீண்டும் விமான போக்குவரத்து ஆரம்பம்

0

கொவிட் -19 இன் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் நீக்கப்படும் என்று கனடா அரசு அறிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஏர் கனடா நிறுவனம் நாளை முதல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமானத்தை இயக்க வாய்ப்புள்ளது. “ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் 30 அன்று சேவைகளை மீண்டும் தொடங்கும். பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்குள் டெல்லி விமான நிலையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஜென்ஸ்ட்ரிங்ஸ் ஆய்வகத்தில் இருந்து பெறப்பட்ட எதிர்மறை கொவிட்-19 சோதனை (RT-PCR) சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
விமானத்தில் ஏறுவதற்கு முன் இந்த ஆய்வகத்தால் வழங்கப்பட்ட QR குறியீடு கொண்ட சோதனை அறிக்கையை விமான ஆய்வாளர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்” என்றும் கனடா அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

செப்டம்பர் 22 அன்று புதுடெல்லியில் இருந்து மூன்று ஏர் கனடா விமானங்களில் கனடாவுக்குப் பயணம் செய்த பயணிகள் அனைவரின் சோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்ததை அடுத்து இந்த முடிவினை கனடா அரசு எடுத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here