இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இலங்கை அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய பயணிகள் இலங்கை வர தடை என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா நிலைமை தொடர்பாக சுகாதாரத்துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிவறுத்தலுக்கு ஏற்ப, இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
உள்ளூர் சுகாதார அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தலின் படி இந்த கட்டுப்பாடு முடிந்த வரை விரைவாக மதிப்பாய்வு செய்யப்படும் என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.