இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரொன் தொற்றாளர்கள்

0

தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமிக்ரொன் கொவிட் வைரஸ் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை இந்த ஒமிக்ரொன் வைரஸ் 25க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது.

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கு ஒமிக்ரொன் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று(02) தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருக்கு கர்நாடகாவில் 66 மற்றும் 46 வயதுகளையுடைய 2 பேருக்கு ஒமிக்ரொன் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் லவ் அகர்வால் இன்று தெரிவித்துள்ளார்.

தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணிய அனைவரும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேநேரம் சகல மாநிலங்களும் கொவிட் பரிசோதனைகளை விரைவாகவும் விரிவாகவும் மேற்கொள்ளுமாறும் இந்திய மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here