இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானிய பிரதமர்…!

0

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக இம்மாத இறுதியில் இந்தியா செல்ல உள்ளார்.

இம்மாதம் நான்காவது வாரத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் பயணத்தில், டெல்லிக்கும் லண்டனுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான விவாதங்கள் மற்றும் ஆலோசனைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு தரப்பினரும் சமீபகாலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

2021-ல், அவரது இந்திய வருகைக்கான இரண்டு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

குடியரசு தினத்தில் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டபோது, பிரதமர் ஜான்சனால் கொவிட்-19 காரணமாக இந்தியாவிற்கு பயணிக்க முடியவில்லை.

பின்னர், மீண்டும் ஏப்ரலில் ஒரு திட்டம் இருந்தபோது இந்தியாவில் இரண்டாவது அலை காரணமாக பயணம் ரத்து செய்யப்பட்டது.

இருவரும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் கிளாஸ்கோ காலநிலை உச்சிமாநாட்டின் சந்தித்தனர்.

அப்போது பிரதமர் மோடி, ஜான்சனுக்கு இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here