இந்தியாவின் 12 நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயத்தில்

0

பருவநிலை மாற்றம் காரணமாக, 2,100 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள், சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, நாசா வெளியிட்டுள்ளது.

இதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது.

உலகளாவிய சராசரி கடல் மட்டம், ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீற்றர் என்ற விகிதத்தில் உயர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள் இவ்வாறு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மும்பை, மங்களுர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

தற்போதைய காலநிலையின் அடிப்படையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக, 2100 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 நகரங்கள், சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை, நாசா வெளியிட்டு உள்ளது.

இதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனிமலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது.

உலகளாவிய சராசரி கடல் மட்டம், ஆண்டுக்கு சுமார் 3.7 மில்லிமீற்றர் என்ற விகிதத்தில் உயர்வடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2100ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கடலோரப் பகுதியில் உள்ள 12 கடலோர நகரங்கள் சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சென்னை மற்றும் தூத்துக்குடி நகரங்கள் இவ்வாறு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மும்பை, மங்களுர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.

தற்போதைய காலநிலையின் அடிப்படையில், இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலை மாறும் பட்சத்தில் கடல்நீர் மட்டம் உயரும் விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here