இந்தியர்களை தாக்கும் உக்ரைன் மக்கள்! தமிழ் மாணவர் விளக்கம்..

0

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவின் கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

கார்கிவ்வை விட்டு வெளியேற ரயில் நிலையம் சென்றபோது ரஷ்ய படையினரின் குண்டுவீச்சில் இந்திய மாணவர் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழரான பாலமுருகன் என்ற மாணவர் தொலைபேசி வாயிலாக பேசுகையில்,

நாங்கள் கார்கிவ்வில் இருந்த போது யாரும் எங்களுக்கு உதவவில்லை.

இதையடுத்து நான் உள்ளிட்ட 20 பேர் அங்கிருந்து தப்பி உக்ரல் என்ற ஊரில் வீட்டின் பதுங்கு குழியில் பாதுகாப்பாக தங்கியுள்ளோம்.

ஆனால் அங்கு நிலைமை மோசமாக காணப்பட்டது.

இந்திய மாணவர்களை உக்ரைன் மக்களும், பொலிசாரும் தாக்குகின்றனர்.

ரயிலில் இந்திய மாணவர்களை ஏற்ற மறுக்கின்றனர்.

உக்ரைன் ராணுவம் எங்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யவில்லை.

இங்கிருந்து ஹங்கேரி மற்றும் சொவாகியா எல்லை எங்களுக்கு சிறிது தூரம் என்ற போதிலும் எந்த எல்லை வழியாக செல்வது என்பது முடிவாகவில்லை.

உக்ரைனை நீங்கள் ஆதரவில்லை.

அந்த நாட்டை தானே ஆதரிக்கிறீர்கள் என கூறி இந்தியர்களை மட்டும் குறிவைத்து தாக்குகிறார்கள் என அதிர்ச்சி விலகாமல் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here