இந்தியர்களுக்கான பயணத்தடையை தளர்த்தியது பிரித்தானியா!

0

இந்தியாவில் இருந்து வருபவர்கள் மீதான பயணத்தடையை பிரித்தானியா அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியா சிவப்பு பட்டியலில் இருந்து அம்பர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து பிரித்தானியாவிற்கு செல்பவர்கள் அங்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம் மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை அறிக்கையை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் பிரித்தானியாவில் எங்கு தங்கப்போகிறோம் என்ற தகவல் அடங்கிய படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். பயணியர் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here