இத்தாலியில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு

0

இத்தாலியில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில், அங்கிருந்த தப்பி சென்ற தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்நாட்டு பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். தனது இரு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் குறித்த பெண் நேற்று முதல் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், Adige என்ற ஆற்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. 34 வயதான சசித்ரா நிசன்சல பெர்னான்டோ என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இத்தாலியின் வடக்கு வெனெற்றோ பிராந்தியத்தில் (Veneto region) Verona நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 11, 3 வயதுகளுடைய இரண்டு பெண் குழந்தைகளுமே கொல்லப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் சடலம் வீட்டின் படுக்கை அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சடலங்கள் கிடந்த அறையில் கொலைக் குப் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் எதுவும் காணப்படவில்லை.

குழந்தைகளது சடலங்கள் மீட்கப்பட்ட பின்னர் தாயாரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் தீவரமாக ஈடுபட்டிருந்தனர். பல மணி நேரங்கள் நீடித்த தேடுதலுக்குப் பிறகு அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலம் அப்பகுதியில் உள்ள Adige என்ற ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here